தமிழகத்தில் உள்ள 40பாராளுமன்ற தொகுதிக்கும் நாளை வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வாக்குபதிவு இயந்திரங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாளை பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு ஆறு சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,701 வாக்கு சாவடிகளில் நடக்க உள்ள நிலையில் இன்று வாக்கு பெட்டி இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தீவிர பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு இயந்திரம் அதன் உபகரணங்கள் மற்றும் மாற்று திறனாளிகள் வாக்கு அளிக்க வசதியாக தள்ளுவண்டி என ஓவ்வொரு வாக்கு சாவடிக்கும் தேவையான அனைத்தும் தக்க பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது