Skip to content
Home » பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் காலமானார்

பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் காலமானார்

  • by Senthil

 இந்தியாவின்  பிரபல சட்ட நிபுணரும்,  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பாலி  சாம் நாரிமன்  இன்று காலமானார்.  அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக உடல்  நலம் பாதிக்கப்பட்ட அவர்  டில்லியில் உள்ள இல்லத்தில்  காலமானார்.

 இவர் 1929ல்  பர்மாவில்  பிறந்தவர்.    பின்னர்  மும்பை வந்தார். பத்ம விருதுகள் பெற்றவர். 1950ல் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தம் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார்.பல உயரிய பதவிகளை வகித்தார். 1999ம் ஆண்டில் நாடாளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினர் ஆனார்.

1972 மே முதல் 1975 ஜூன் வரை இந்திய கூடுதல் ஜெனரல் என்னும் பதவியில் இருந்தார். ‘நெருக்கடி நிலை’ இந்திய அரசு பிறப்பித்ததால் அப்பதவியிலிருந்து விலகினார்.  பார்சி இனத்தைச் சேர்ந்த நரிமன் 1955ல் பாப்சி காண்ட்ராக்டர் என்னும் பெண்மணியை மணந்தார்.

இவரது மகன்  ரோகின்டன் நாரிமன்  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். அதனால் இவர்  ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில்,  உச்ச நீதிமன்றத்தில் பிணை வாங்க வழக்குரைஞராகப் பணியாற்றியது அறமற்ற செயல் என்ற கருத்து உள்ளது.

காவிரி வழக்கில் கர்நாடகாவுக்காக இவர் ஆஜா் ஆனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!