Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ள சாராயம் காய்ச்ச வீட்டில் வைத்திருந்த பொருட்கள் பறிமுதல்….

கள்ளக்குறிச்சி மாவட்டம், நெடுமுடியான் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை அவரது மகன் பாக்கியராஜ் 37 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குமரேசன் 25 என்ற இரு நபர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் கொத்தனார் வேலைக்காக தங்கி இருப்பதாகவும் பாக்கியராஜ் ஏற்கனவே அம்பிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து பாக்கியா 15 என்ற மகளும் சரத்பாபு( 12), திருமுருகன்( 10) என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு செங்காட்டுப்பட்டி துறையூர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி 31 என்ற பெண்ணுடன் தகாத உறவால் பெரம்பலூர் அருகே பனிமலர் பள்ளி அருகில் வாடகைக்கு வீடு எடுத்து ஜெயந்திக்கு ஹரிஹரன் 10 மகன் ஒருவர் உள்ளார் .அவருடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாக்யராஜுக்கும் ஜெயந்திக்கும் நேற்று இரவு ஏற்பட்ட பிரச்சனையில் காரணமாக ஜெயந்தி பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு வந்து பாக்யராஜ் வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவதாக தகவல் கூறியுள்ளனர். இதன் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த பொழுது வீட்டில் இருந்த நூறு லிட்டர் ஊழல் மற்றும் ஒரு லிட்டர் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இருவரையும் கைது செய்து சாராயத்தை காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அங்கேயே கொட்டி அழிக்கப்பட்டது. பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!