Skip to content
Home » தனது போட்டோவை கோபத்தில் கிழித்த அண்ணாமலை…..நடந்தது என்ன…?.. வீடியோ

தனது போட்டோவை கோபத்தில் கிழித்த அண்ணாமலை…..நடந்தது என்ன…?.. வீடியோ

  • by Senthil

கோவை விமான நிலையம் அருகே உள்ள சித்ரா ஆடிட்டோரியத்தில்  நேற்று உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பெண்மையை போற்றுவோம் ,மாதர்களின் ஒற்றுமை மலரட்டும்,கலந்துரையாடுவோம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

விழாவில் பங்கேற்க மேடைக்கு வந்த  அண்ணாமலை மைக்  இருக்கும்  ஸ்டாண்டில் தனது புகைப்படத்துடன் பெண்மையை போற்றுவோம் என்ற வாசகங்களோடு ஒட்டியிருந்த போஸ்டரை கிழித்து தூக்கி வீசினார்.  இதனால் விழா ஏற்பாடு செய்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சமீபகாலமாக அவரது பேச்சு நடவடிக்கைகள் எல்லாம் ஒரு மாதிரியாக இருக்கிறது. நான் ஜெயலலிதா, எம்.ஜிஆர் என பேசி வந்த அண்ணாமலை இப்போது போஸ்டர்களை ஏன் கிழித்தெறிகிறார். அவருக்கு என்ன ஆனது என

அதிர்ச்சி அடைந்து யாரும் அவர் அருகே சென்று வரவேற்கவில்லை.

காரணம் மேடையில்  அண்ணாமலையின் பெரிய புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. அதையும் கிழிப்பார் என பெண் நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அதை கண்டும் காணாதவர் போல  தனது இருக்கையில் அமர்ந்தார். நிர்வாகிகளையும்  மேடைக்கு வரும்படி அழைத்தார் பெண்கள் மேடைக்கு சென்றனர்.

மகளிர் தின விழாவில்  ஆண்களின் புகைப்படம் ஒட்டப்பட்டது எதற்கு என  கருதி அவர் தனது புகைப்படத்தை கிழித்தார் என சிலர் விளக்கம் அளித்தனர். அப்படியானால் மேடையில் இருந்த அவரது இன்னொரு படத்தையும் கிழித்திருக்க வேண்டுமே அதை ஏன் விட்டு விட்டார்? அவரது நடவடிக்கைகள் கொஞ்ச நாளாக மாறுபாடாக இருக்கிறது என விழாவுக்கு அழைத்தவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!