Skip to content
Home » மீன்சுருட்டியில் இன்று திமுக பிரசார கூட்டம்…… அமைச்சர் சிவசங்கர் அழைப்பு

மீன்சுருட்டியில் இன்று திமுக பிரசார கூட்டம்…… அமைச்சர் சிவசங்கர் அழைப்பு

  • by Senthil

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்* என்ற முன்னெடுப்பில் “பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல் வட்டும்!என்ற தலைப்பில் இன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், காட்டுமன்னார்கோவிலில் இருந்து மீன் சுருட்டி செல்லும் வழியில்) மாலை 5மணிக்கு நடக்கிறது.

கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர், வேளாண்மை  மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் இராஜேந்திரன், ஜெயங்கொண் டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்ற னர். தி.மு.க. தலைமை கொறடா கோவி.செழி யன் சிறப்புரை ஆற்றுகின்றார்.
அதுசமயம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அனைத்து நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, பேரூர், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!