Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்டத்தில் 21-ம் தேதி மின்நிறுத்தம்

திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (21.02.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி. ரோடு, ஆட்சியர் அலுவலக சாலை, ராஜா காலனி, ஜங்ஷன் பகுதிகள், பாரதியார் சாலை, மேலப்புதூர், முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை மற்றும் உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, பாண்டமங்கலம், வயலூர் ரோடு, சீனிவாசநகர், இராமலிங்கநகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் இருக்காது. மேலும் கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் மற்றும் வாசன் நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!