Skip to content

தன் உதவியாளரை இயக்குனராக அறிமுகப்படுத்தும் பிரதீப் ரங்கநாதன்

ரவி மோகன், காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ என்ற படத்தை இயக்கி சின்ன கேரக்டரில் நடித்த பிரதீப் ரங்கநாதன், பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களின் மூலம் ஹீரோவாக நடித்து, தொடர்ச்சியான வெற்றியின் மூலம் முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். அவரது 3 படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி நடித்துள்ள ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், தனது உதவியாளர் ஒருவரை இயக்குனராக அறிமுகப்படுத்தும் பிரதீப் ரங்கநாதன், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இதில், ‘டியூட்’ படத்தில் அவரது ஜோடியாக நடித்திருந்த மமிதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார். இது கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதையுடன் உருவாகிறது

error: Content is protected !!