PR Show மூலம் தயாரிப்பாளராகிறார் பிரதீப் ரங்கநாதன்! நடிகை மமிதா பைஜூவை மையமாக கொண்டு உருவாகும் புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன்!
பிரதீப் கதை எழுத PR Show நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 6 புதுமுக இயக்குநர்கள் இயக்க உள்ளனர். இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, சுவாசிகா, அனாமிகா மஹி உள்ளிட்டோர் நடிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
