Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

7 மாத கர்ப்பிணி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

பிரான்ஸ்  தலைநகர்  பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.  ஒலிம்பிக் போட்டியில் 7 மாத கர்ப்பிணி ஒருவரும் பங்கேற்றுள்ளார்.  ஆச்சரியமான செய்தி தான். ஆனால் அது  தான் உண்மை. எகிப்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ் 7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார்.

களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை என இன்ஸ்டாவில்  அவர் பதிவிட்டு கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.

நடா ஹபீஸ் மருத்துவ பட்டதாரி. 3வது முறையாக  ஒலிம்பிக்கில் பங்கேற்று உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!