Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் பிரேமலதா சாமிதரிசனம்

தேர்தல் வெற்றிக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேமுதிக கட்சி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியனுடன் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த பிரமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அடுத்த பேட்டியில் கூறுகையில் நேற்று எனது பிறந்தநாள் என்பதால் திருமலைக்கு வந்தோம். இன்று தெலுங்கு வருட பிறப்பு யுகாதியை ஒட்டி ஏழுமலையானை வேண்டிக் கொண்டோம். இந்த ஆண்டு அனைவருக்கும் பெருமாள் ஆசியுடன் உலகில் உள்ள அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். இந்த ஆண்டு அனைவருக்கும் நல்லதை சேர்த்து மகிழ்ச்சியுடன் வாழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கும். வழக்கமாக விஜயகாந்த் எந்த செயலை தொடங்கினாலும் ஏழுமலையானை வேண்டி செயல்படுவது வழக்கம். அவர் நம்மை விட்டு பிரியவில்லை எங்களுடனே இருக்கிறார் நம்முடனே இருக்கிறார். எனவே தேர்தலுக்கு முன்பு ஏழுமலையானை வேண்டிக் கொள்வதற்காக வந்து வேண்டிகொண்டேன். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் வந்து சுவாமிக்கு நன்றி செலுத்துவோம் என்றார்.

error: Content is protected !!