உடல்நலக் குறைவால் இன்று (நவ.19) காலமான கொளத்தூர் தொகுதி தவெக MLA வி.எஸ்.பாபுவின் மறைவிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், MLA வி.எஸ்.பாபு இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் தேமுதிக சார்பில் இரங்கல் தெரிவித்து கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
MLA வி.எஸ்.பாபு மறைவுக்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்
