Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை உயர்வு

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை உயர்வு

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி எரிவாயுவின் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, மாதந்தோறும் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது.

சென்னையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலை திருத்தத்தின்படி, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.10.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், சென்னையில் வணிக சிலிண்டரின் விற்பனை விலை ரூ.2,916.50-ஆக உயர்ந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

அதேவேளையில், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திரப் வரவு செலவில் எந்தவிதக் கூடுதல் சுமையும் விழாத வகையில், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அது வழக்கம்போல் ரூ.957.50 என்ற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!