Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.44 போதாது… தனியாருக்கு பால் ஊற்றும் நிலை வரும்!”

ரூ.44 போதாது… தனியாருக்கு பால் ஊற்றும் நிலை வரும்!”

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணை தலைவர் முனுசாமி கூறியதாவது:

ஆவின் பால் கொள்முதல் விலையை, 35 ரூபாயில் இருந்து, 45 ரூபாயாக கொள்முதல் செய்யவும், ஊக்கத்தொகை மூன்று ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக உயர்த்த கோரினோம்.

முதலில் கொள்முதல் விலை, 2 ரூபாய், ஊக்கத்-தொகை, 1 ரூபாய் என உயர்த்தினர். தற்போது மூன்று ரூபாய் உயர்த்தி உள்ளனர். இதன் மூலம், 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக அறிவித்-துள்ளனர்.கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றும்போது லிட்டருக்கு, 1.25 ரூபாய் நிர்வாக செலவுக்காக பிடித்தம் செய்தது போக, 42.75 ரூபாய் மட்டுமே உற்பத்தியாளருக்கு கிடைக்கும். மீண்டும் விலையை உயர்த்த வலியுறுத்துகிறோம். கட்டு-படியாகும் விலை கிடைக்காவிட்டால், ஆவி-னுக்கு பால் ஊற்றுவோர், தனியாருக்கு செல்வது நிச்சயம் என்று இவ்வாறு கூறினார்.

error: Content is protected !!