திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் துணி மற்றும் காகிதத்தை பயன்படுத்தி நூதன முறையில் பணம் திருடிய கோயில் அர்ச்சகர் முகுந்தன் (74) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இத்திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த திருமுருகன் (56) என்பவரும் போலீசாரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கோயில் வளாகத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் கோயில் உண்டியலில் திருடிய அர்ச்சகர் கைது
