தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் ஹாக்கியில் தமிழக அணிக்காக விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சொந்த ஊர் திரும்பிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு பொதுமக்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் இன்று பேண்ட், வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துவந்து உற்சாக வரவேற்பு
பேட்டி. ஸ்ரீநாத் – ஸ்கேட்டிங் மாஸ்டர்
தேசிய அளவிலான 8ஆவது ஐஸ் ஸ்கேட்டிங் ஹாக்கி அரியானா மாநிலம் குருகிராமில் நடந்தது. இந்த போட்டியில் தமிழக ஹாக்கி அணிக்காக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த
மாணவர்கள் சுகனேஷ், துரைமுருகன், விஷ்ணுவர்தன் அபினவ் ஆகிய 4 பேர்

10 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஐஸ் ஸ்கேட்டிங் ஹாக்கியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்தனர். அதேபோல் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முகமதுஅனஸ் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், மாணவி ரோஷினி

மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தனர்.
மாணவர்கள் பரிஷித், ராஜ்வீர், மேகன் மற்றும் மாணவி யாழினி ஆகிய 4 பேர் தமிழக அணிக்காக சிறப்பாக விளையாடினர். தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தங்களது சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு இன்று திரும்பிய 10 மாணவ,

மாணவிகளுக்கு பொதுமக்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் இன்று ஆரத்தி எடுத்து, மாலை மற்றும் சால்வை அணிவித்து, கிரீடம் சூட்டி, பட்டாசு வெடித்து, பேண்ட், வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துவந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
