Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தப்பியோடிய கைதி : தேடுதல் வேட்டை தீவிரம்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தப்பியோடிய கைதி : தேடுதல் வேட்டை தீவிரம்!

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயப் பின்புறமுள்ள தெருவைச் சேர்ந்தவர் ராகுல் (30). தவெக உறுப்பினரான இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும், காரில் கட்டப்பட்டிருந்த தவெக கொடி கிழித்தெறியப்பட்டும் இருந்துள்ளது.

இது குறித்துத் தென்பாகம் போலீசில் ராகுல் புகார் அளித்தார். தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, முன்விரோதம் காரணமாக இதில் ஈடுபட்டதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த முகமது தவுபீக் (19) என்பவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முகமது தவுபீக்கிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், போலீசார் அவரைத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குப் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 27) அதிகாலை 4 மணியளவில் அவர் அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடிவிட்டார்.

மேலும், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது செல்போன் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிற்றையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர் சர்ச்சையில் தென்பாகம் காவல் நிலையம்:

ஏற்கெனவே கடந்த 22-ஆம் தேதி காலை விசாரணைக் கைதியாக இருந்த பிரபல ரவுடி ஒருவரைத் தென்பாகம் போலீசார் பிடித்து வைத்திருந்த நிலையில், அவரும் அன்று தப்பியோடிவிட்டார். பின்னர் மாலையில் வழக்கறிஞர்கள் மூலம் பேசி அந்த ரவுடியை வரவழைத்து, ஆயுதங்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அருணாச்சலம் என்ற பார் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்குப் பின்னர், 2 கைதிகள் தப்பியோடியுள்ளனர். தென்பாகம் காவல் நிலையம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!
Secret Link