Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் ரெட்டிபட்டி குறும்பர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (41 )அரசு பேருந்து டிரைவர் கடந்த பத்தாம் தேதி இவர் ஓலையூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மத்திய பேருந்து நிலையம் நோக்கி வந்தார் பேருந்தில் அருண்குமார் நடத்துனராக செயல்பட்டு வந்தார். கேகே நகர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தினர். அப்போது சாலையில் பாதை விடுவது சம்பந்தமாக அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநர் மற்றும் சிவக்குமார் இடையே தகராறு ஏற்பட்டது இதில் அந்த தனியார் பஸ் ஓட்டுநர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சேர்ந்து சிவக்குமாரை தாக்கினர் இதுகுறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து அந்த தனியார் நிறுவன பேருந்து ஓட்டுனர் கே கே நகர் உடையான் பட்டியை சேர்ந்த கனகராஜ் 40 என்பவரையும் அவருடன் பஸ் டிரைவரை தாக்கிய அவரது மகன் கார்த்திகேயன் 20 ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!