Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவிகளுக்கு ஆபாச வீடியோ…….மயிலாடுதுறை கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

மயிலாடுதுறை  தருமபுரம் ஞானாம்பிகா அரசினர் மகளிர் கல்லூரியில்  வரலாற்றுத்துறை இணை பேராசிரியராக பணியாற்றுபவர் ராமர்.  இவர்   கல்லூரி மாணவிகளுக்கு  போனில் ஆபாச வீடியோக்கள் அனுப்பினாராம். இது குறித்து ஒரு மாணவி கல்லூரி துறைத்தலைவரிடம் புகார் செய்தார். அதன் பேரில் ராமர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, பேராசிரியர் ராமரை கைது செய்ய வேண்டும். சஸ்பெண்ட் என்று கண்துடைப்பு நடவடிக்கையுடன் நிறுத்திவிடக்கூடாது. அவர்  கைது செய்யப்படாவிட்டால் கல்லூரியை முற்றுகையிடுவோம் என கூறி உள்ளனர்.

ராமர் ஏற்கனவே அண்ணாமலை பல்கலையில் வேலை பார்த்தவர். அங்கிருந்து ஆசிரியர்கள் பல கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டபோது ராமர்  மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!