Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் அன்பழகன் நகரில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதானவர்களிடம் இருந்து ரூ5500 பணம், 6 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!