தமிழ்நாட்டில் SIR கைப்பாவையாக மாறி எதேச்சிதிகார போக்குடன் தமிழ்நாட்டில் SIR செயல்படுத்துவதை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கரூர் மாவட்ட அவை தலைவர் இளங்கோவன் தலைமையில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்
தமிழ்நாட்டில் SIR சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே

கைவிடக் கோரியும் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சிதிகார போக்குடன் தமிழ்நாட்டில் SIR செயல்படுத்துவதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்ற இந்நிலையில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாநில மாவட்ட தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் நகர ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கிளை கழக செயலாளர் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்து கையில் பதாகை உடன் SIR சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்

