கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயகபூர்வமான இயக்கங்கள் போராட்டங்களை வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்த அனுமதியில்லை என்ற தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும்,
நூற்றாண்டு கண்ட கரூரின் அடையாளங்களில் ஒன்றான அமராவதி பழைய பாலத்தை மீண்டும் நடைபயிற்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும்.
ஒன்றிய அரசு 16வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழ்நாட்டிற்கு ரூ.20054 கோடியையும் 2026- திருத்திய நிதிக்குழு அறிக்கை உள்ளாட்சிகளுக்கு வழங்கிய ரூ.29563 கோடியை மாநில தவெக அரசு விடுவிக்க வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
