Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி உரிமைக்காக நவ.26ல் திருக்காட்டுப்பள்ளியில் கண்டனப் பேரணி!

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் உரிமை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்
வருகிற 26ம் தேதி திருக்காட்டுப் பள்ளியில் மாபெரும் கண்டன பேரணி நடத்துவது என காவிரி உரிமை மீட்பு குழு கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன

தஞ்சையில் உள்ள காவிரி உரிமை மீட்பு குழு அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடந்த கூட்டத்தில்

தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து உழவர்களுக்கும் கூட்டுறவு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

பட்டா உள்ளவர்களுக்கு மட்டும் பயிர் காப்பீடு என்ற நிபந்தனையை தளர்த்தி அணைத்து உழவர்களுக்கும் சம்பா பருவ பயிர் காப்பீடு செய்யும் வகையில் ஆணையிட வேண்டும்

பயிர் காப்பீட்டிற்கான காலகெடுவை டிசம்பர் மாதம் 15 ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்

காவிரியில் கர்நாடக அரசிடமிருந்து தண்ணீரை பெற்று தராத தமிழ்நாடு அரசு வறட்சியை கருத்தில் கொண்டு இந்த வருட பயிர் காப்பீட்டுக்கான சந்தா தொகையை அரசே ஏற்க வேண்டும்

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் உரிமை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து வருகிற 26 ம் தேதி திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் கண்டணி பேரணி நடத்துவது

என்கின்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

error: Content is protected !!