மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் எதிர்காலம், ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மனதில்கொண்டு, அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுபானக் கடைகள் அமையக் கூடாது என்ற விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
