Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். நத்தம்பண்ணையில்  மகாதமா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி கட்டிட பணியை  பார்வையிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை நிறைவு செய்யும்படி அறிவுரை வழங்கினார்.

கவிநாடு கிழக்கு ஊராட்சி கணக்கம்பட்டி கிராமத்தில்  அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அங்கு குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்படுவதை பார்வையிட்டார். பின்னர் குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களத கற்றல் திறன்களை அறிய உரையாடினார்.

அதைத்ெதாடர்ந்து பூசத்துறை முதல் நத்தம்பண்ணை வரை நடைபெறும்  மயான சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டருடன்  பொறியாளர் பரமசிவம், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!