Skip to content
Home » கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுவானவராகவும், பொறுப்பானவராகவும் இருக்க வேண்டியது ஆளுநர் பதவி. இந்தப் பதவியைக் கொச்சைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் பாஜகவின் பிரதிநிதியைப் போலவும், ஆர்எஸ்எஸ் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்பவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சுற்றுப் பயணம் என்கிற பெயரில் தான் செல்லும் இடகங்களில் எல்லாம் விஷமப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இதனால், தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் அவருக்கு எதிரான போராட்டங்கள் இயல்பாக நடந்து வருகிறது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு திங்கள்கிழமை அவர் வருகை தருவதாக

இருந்தது. புதுக்கோட்டைக்கு அவர் வருகை தருவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

திருச்சியிலிருந்து காரைக்குடி செல்லும் புறவழிச்சாலையில் அன்னவாசல் பிரிவு ரோட்டில் கட்டியாவயல் என்னும் இடத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சின்னதுரை தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், அரிமழம் ஆர்.வி.ராமையா,மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், சிபிஐ மாவட்டப் பொருளாளர் ஆர்.ஜீவானந்தம், காங்கிரஸ் நகரத் தலைவர் இப்ராஹிம் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்.

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், விதொச மாவட்டச் செலாயளர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, சிபஐ சார்பில் வி.சிங்கமுத்து, க.சுந்தர்ராஜன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். போலீசாரின் தடுப்புகளையும் மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் 14 பெண்கள் உட்பட 64 பேரை போலீசார் கைது செய்தனகருப்ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!