Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் புதிய மின்மாற்றி….அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர் ஊராட்சி, பொன்னனூரில் ரூ.7.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினை, சட்டம். நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா , ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆனந்தாய், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 4.86 லட்சம் மதிப்பீட்டில்

மேற்கொள்ளப்பட்ட புதிய சிமெண்ட் சாலையினை அமைச்சர் ரகுபதி இன்று திறந்து வைத்தார். மேலும் மரக்கன்று நடும் நிகழ்வினையும் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!