புதுக்கோட்டையில் இன்ற 9 புதிய பஸ் வழித்தட
சேவைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் .எஸ்.ராகுபதி ,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்,
ஆகியோர் இன்று ( கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.அதைத்தொடர்ந்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின்
பொருளாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள்
சிறப்பாக செயல்படுத்த வருகின்றார். அந்த வகையில், தமிழகத்தின் முன்னோடித்
திட்டமான, நகர்ப் பெருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.பொதுமக்களின் நலனில் கருதிசெயல்படுத்தப்படுகின்ற இத்தகைய புதிய பேருந்து சேவைகளை அனைவரும் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜன்,, முன்னாள் அரசு வழக்கறிவர் கே.கே.செல்லப்பபாண்டியன் , மாவட்ட வருவாய் அலுவலர் .ஏ.கோ.ராஜராஜன் , புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர்எஸ்.எம்.லியாகத் அலி, போக்குவரத்து கழக பொது மேலாளர் முமகது நாசர், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
9 புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

