தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே ஆனந்தம் சில்க்ஸ் கடையில் நேற்று நான்கு பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 10 மணிக்கு கடைக்குள் நுழைந்து கடைக்குள் வந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றி தடையினை உள்புறமாக மூடி மாலை வரை சோதனை

நடத்திய நிலையில் பின்பு பணியாளர்களை வெளியேற்றினார். தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டவர்கள் இன்று இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய துணை ராணுவ படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இன்று கடைக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. சோதனை முடிந்த பிறகு என்ன விவரம் என்பது தெரிய வரும்.
