Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில்வே ஊழியர் திடீர் தற்கொலை! -திருச்சி க்ரைம்

தூத்துக்குடி அருகே நண்பரை மதுபாட்டிலால் அடித்துகொலை

நண்பருக்கு சாட்சி கையெழுத்திட்ட ரயில்வே ஊழியர் திடீர் தற்கொலை

திருச்சி சுப்பிரமணியபுரம் கருணாநிதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் நிவாசுதீன் வயது 34.
ரெயில்வேயில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார். இவர் தனது சக ஊழியர் ஒருவருக்குச் சாட்சிக் கையொப்பம் போட்டுக் கொடுத்திருந்த நிலையில், அந்த நபர் அவரிடம் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிவாசுதீன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மாயம்

திருச்சி பொன்மலைப்பட்டி பத்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் வயது 72 ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை பிரிந்தார் பின்னர் அங்குள்ள தனது சகோதரி ஜன்னத் பிவி வீட்டில் வசித்து வந்தார் இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்று அவர் பின்னர் வீடு திரும்பவில்லை ஜன்னத் பிவி பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை பின்னரே இது குறித்து ஜன்னத் பிவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் ஆம்னி பஸ்ஸில் ஆடிட்டர் திடீர் சாவு

தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் வயது 57. ஆடிட்டர்.
15-ந் தேதி இவர் தூத்துக்குடியில் இருந்து திருச்சிக்கு ஆம்னி பஸ்சில் வந்தார். அதிகாலை அந்த பஸ் பஞ்சபூதி பஸ் நிலையத்துக்கு வந்தது அப்போது சங்கர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் சங்கரின் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பெயர் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!