Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தர்பங்கா – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தர்பங்கா - போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பீகார் மாநிலம் தர்பங்கா சந்திப்பில் இருந்து கோவை போத்தனூர் சந்திப்பு வரை ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ரயில் எண் 05591, நாளை புதன்கிழமை காலை 7.05 மணிக்கு தர்பங்காவில் புறப்பட்டு, விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக 20ஆம் தேதி காலை 11.30 மணிக்கு சேலம் வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு மதியம் 3.30 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும்.

error: Content is protected !!