Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டூவீலர்களை சங்கிலியால் பூட்டி அபராதம்-தஞ்சை ரயில்வே காவல்துறை

பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை சங்கிலியால் பூட்டி அபராதம் விதித்த இரயில்வே காவல்துறையினர்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து ஏராளமான ரயில்களை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரயில் நிலையம் முகப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இந்த

நிலையில் அதையும் மீறி ரயில் நிலையத்தின்‌ முகப்பு பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனையடுத்து இன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சங்கிலியால் பூட்டி வாகன‌ ஓட்டிகளுக்கு 1,000 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நிறுத்தினால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் என‌ தெரிவித்தனர்.

error: Content is protected !!