Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை…

கரூர் மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி – சாலைகளில் தேங்கி இருக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.

சென்னை வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில் கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

கரூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே லேசான முதல் பரவலான மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை முதல் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

கரூர் பழைய பேருந்து நிலையம், வெங்கமேடு, சர்ச்கானார், லைட் ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர் சுங்க கேட், காந்திகிராமம், தான்தோன்றி மலை, மணவாடி, மற்றும் சுற்றுவட்டார பகுதியான கிருஷ்ணராயபுரம் கடவூர் உப்பிடமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான வரை மழை பெய்து வருகிறது.

மேலும், கரூர் மாநகராட்சி உட்பட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

error: Content is protected !!