Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

மிக்ஜம் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த மழை இன்று நள்ளிரவுக்கு பின்னர் குறையத்தொடங்கும் என  தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்  கூறினார்.  இன்று நள்ளிரவு புயல் சின்னம் சென்னையை கடந்து சென்று விடும். அதன் பிறகு படிப்படியாக  மழை குறைந்து விடும். மழை காரணமாக ஏற்கனவே சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் நாளை  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக  கலெக்டர்  வளர்மதி அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!