Skip to content
Home » பெங்களூரை விரட்டியது ராஜஸ்தான்.. ஆட்டம் போட்ட கோலி “கப்சிப்”

பெங்களூரை விரட்டியது ராஜஸ்தான்.. ஆட்டம் போட்ட கோலி “கப்சிப்”

ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
பெங்களூரு அணிக்கு கேப்டன் டுபிளசி (17) சுமாரான துவக்கம் தந்தார். விராத் கோலி (33), கிரீன் (27) நம்பிக்கை தந்தனர். மேக்ஸ்வெல் (0) ஏமாற்றினார். தினேஷ் கார்த்திக் (11) சோபிக்கவில்லை. ரஜத் படிதர் (34), லாம்ரர் (32) ஓரளவு கைகொடுத்தனர். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், காட்மோர் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. யாஷ் தயாள் வீசிய 3வது ஓவரில் 4 பவுண்டரி விரட்டினார் ஜெய்ஸ்வால். சிராஜ், யாஷ் தயாள் ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்த காட்மோர் (20), பெர்குசன் பந்தில் அவுட்டானார். ஜெய்ஸ்வால் 45 ரன் எடுத்தார். சஞ்சு சாம்சன் (17) நிலைக்கவில்லை.

துருவ் ஜுரெல் (8) ‘ரன்-அவுட்’ ஆனார். பின் இணைந்த ரியான் பராக் (36), ஷிம்ரன் ஹெட்மயர் (26) ஜோடி கைகொடுத்தது. பெர்குசன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பாவெல் வெற்றியை உறுதி செய்தார். ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாவெல் (16) அவுட்டாகாமல் இருந்தார்.
‘எலிமினேட்டரில்’ வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, நாளை சென்னையில் நடக்கும் தகுதிச் சுற்று-2ல் ஐதராபாத் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, பைனலில் (மே 26, சென்னை) கோல்கட்டாவை எதிர்கொள்ளும்.  சிஎஸ்கேயை தோற்கடித்த போது ஆட்டம் போட்ட கோலி நேற்று ராஜஸ்தான் அணியிடம் தோல்விக்கு பின்னர் கப்சிப் என பெவிலியன் திரும்பினார்..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!