Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆகஸ்ட் 21-ல் ரியோ ராஜ் நடிப்பில் திரைக்கு வரும் ‘ராம் லீலா’

ஆகஸ்ட் 21-ல் ரியோ ராஜ் நடிப்பில் திரைக்கு வரும் 'ராம் லீலா'

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் பிரபல சின்னத்திரை பிரபலமுமான ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய காதல் திரைப்படமான ‘ராம் லீலா’ (Ram in Leela), வரும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் முறைப்படி அறிவித்துள்ளனர்.

ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கும் 6-வது திரைப்படம் ‘ராம் லீலா’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஈவா என்டர்டெயின்மென்ட் (EYWA Entertainments) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம், நவீனக் காதலையும் குடும்ப உறவுகளையும் மையமாகக் கொண்ட ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!