Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரம்ஜானை முன்னிட்டு ரூ. 75 லட்சத்திற்கு மேல் ஆடுகள் விற்பனை…. விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டி களைகட்டிய ஆட்டு சந்தை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டு சந்தையில் சுற்று வட்டார பகுதிகளான அரவக்குறிச்சி, தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் தங்களது கூடுதல் வருமானத்திற்காக ஆடுகளை வளர்த்து விற்பனைக்காக இந்த வாரச் சந்தைக்கு கொண்டு வருவார்கள்.

இன்று ஆட்டுச் சந்தையில் செம்மரி ஆடு, வெள்ளாடு, கொடியாடுகள் உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த வார சந்தைக்கு

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வியாபாரிகள் காலை முதலே தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கி சென்றனர்.

வாரச் சந்தைக்கு 1000 மேல் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஒரு ஆட்டின் விலை சுமார் 7,500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!