Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

9 வயது சிறுமி பலாத்கார கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

9 வயது சிறுமி பலாத்கார கொலை... குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

மகாராஷ்டிராவில் 9 வயது சிறுமி பலாத்கார கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், பல்கார் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அப்பகுதியைச் சேர்ந்த பிரமோத் ரத்னா கோஷி (51) என்பவன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.ஆர். ரகானே, குற்றவாளி பிரமோத் ரத்னா கோஷிக்கு மரண தண்டனையும், 75,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், தடய அறிவியல் சோதனை மற்றும் நேரடி சாட்சிகள் மூலமாக குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ‘சிறுமி மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வயதில், தந்தையின் வயதில் உள்ள ஒருவரால் மிருகத்தனமான வெறிச்செயலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்’ என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இத்தகைய கொடூரமான குற்றங்கள் நீதித்துறையின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

error: Content is protected !!