Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் கலெக்டராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்…

அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆனி மேரி ஸ்வர்ணா சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை வணிகவரி அலுவலக இணை ஆணையராக பணியாற்றிய, ரத்தினசாமி அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, அரசின் நலத்திட்டங்கங்களை முழு அளவில் செயல்படுத்தப்படும், மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று கூறினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள்  ஆட்சியர் ரத்தினசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!