Skip to content
Home » டில்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம்…. அதிமுக சார்பில் ரவீந்திர நாத் எம்.பி. பங்கேற்பு

டில்லியில் இன்று அனைத்துகட்சி கூட்டம்…. அதிமுக சார்பில் ரவீந்திர நாத் எம்.பி. பங்கேற்பு

  • by Senthil

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர்  நாளை  தொடங்கி  ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் நாளை கூடுவதைெ யாட்டி டி ல்லியில் இன்று நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கிறேன் என்று ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நாளை (20.7.2023) டில்லியில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.7.2023) மாலை 5:30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்ததின் பேரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!