Skip to content

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… மாணவி செயின் மாயம்… திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி, பீமநகர், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (49). இவர் கவுகர் ஜான் (50) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வெங்கடேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் குடிபழக்கத்திற்கு அடிமையாகி அதிகளவில் குடித்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி கவுகர் ஜான் மற்றும் அவரது மகன் தியானேஷ் ஆகியோர் வெங்கடேசை கண்டித்துள்ளனர். இனத்தொடர்ந்து கடந்த ஜன. 18ம் தேதி தன் அறைக்கு உறங்கச்சென்ற வெங்கடேஷ் நேற்று வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை சந்தேகம் அடைந்து அவரது அறையின் உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் செஸன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

வாலிபரிடம் டூவீலர் திருட்டு…

திருச்சி சிந்தாமணி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்திய பாலா (24). இவர் தனது மோட்டார் சைக்கிளை சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வெனிஸ் தெரு ரேசன் கடை அருகாமையில் நிறுத்தினார். பின்னர் அங்குள்ள பெரியசாமி டவருக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிள்யை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சத்திய பாலா கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திருட்டுப் போன மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ. 1.50 லட்சம் ஆகும்.

 

கல்லூரி மாணவியின் 5 பவுன் செயின் மாயம்..

திருச்சி காட்டூர் புகழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவரது மகள் பனாசிர் (வயது 19) கல்லூரி மாணவியான இவரது ஐந்து பவுன் செயின் அறுந்து விட்டது. அதைத்தொடர்ந்து அந்த செயினை தனது பார்சில் வைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலையில் கல்லூரி முடிந்து நண்பருடன் சென்றார்.
அதைத்தொடர்ந்து நண்பர்,பெனாசிர் கையில் இருந்த கைப்பையை வாங்கிக்கொண்டு காந்தி மார்க்கெட் பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்றார். பின் தொடர்ந்து பெனாசீர் பஸ் பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்றார். பின்னர் அந்த பகுதியில் உள்ள பொற்கொல்லரிடம் அதை சரி செய்வதற்காக நண்பரிடம் இருந்த கைப்பையை வாங்கி உள்ளே இருந்த பர்சில் எடுத்தார். அப்போது அதில் பரிசில் வைத்து இருந்த 5 பவுன் செயினை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். பிறகு தான் மர்ம ஆசாமிகள் யாரோ நகையை திருடி இருக்கலாம் என தெரிய வந்தது. இது குறித்து பெனாசீர் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!