ஷாங்காய்: சீன பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட அமெரிக்க அதிபர் Donald Trump மற்றும் அவரது குழுவினர், சீன அரசு வழங்கிய பரிசுப் பொருட்களை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் உளவு பார்க்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பு முறைகள் குறித்த அச்சத்தின் காரணமாக, இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படுவது வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்க அதிகாரிகள் பலரும் சீன பயணத்தின் போது தங்களது மின்னணு சாதனங்களை கொண்டு செல்லாமல் இருப்பது வழக்கம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
