Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் பன்றி, குப்பை பிரச்சனைக்கு தீர்வு கோரி மக்கள் போராட்டம்!

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றி மற்றும் குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை மாநகர பகுதியை ஒட்டி உள்ள மிகப்பெரிய ஊராட்சி நாஞ்சிக்கோட்டை இந்த ஊராட்சிக்குட்பட்ட மாதா கோட்டை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் குப்பை மற்றும் பன்றி தொல்லை அதிகமாக உள்ளதாகவும் தெருக்களில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாததால் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. உடனடியாக தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி பணியாளர்கள் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாதா கோட்டை சாலை பகுதியில் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர்.

error: Content is protected !!