Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாமநில பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் சிறப்பு

கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கரூர் அருகேயுள்ள காதப்பாறை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வெண்ணைமலை இனாம் நிலப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வெண்ணைமலை இனாம் நிலப் பிரச்சினைக்கு தமிழக அரசு தீர்வு காண வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் தவெக மாவட்ட அமைப்பு செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!