Skip to content
Home » ரிஷிகேஷில் மூவர்ண கொடியுடன் ரஜினி…

ரிஷிகேஷில் மூவர்ண கொடியுடன் ரஜினி…

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ம் ஆண்டில் ‘காலா’, ‘2.0’ படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்தார். இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் 10 ம் தேதி வியாழக்கிழமை

திரையரங்குகளில் வெளியான நிலையில், இவர் புதன்கிழமை தனது இமயமலை பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்டின் ரிஷிகேஷியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் உள்ள சாமிகளை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில்  யோகதா சத்சங்க ஆசிரமம் – துவாரஹத் இன்று  யோகதா சத்சங்க ஆசிரமம் – துவாரஹாத்தில், ஸ்வாமிஜிகளுடன் இணைந்து இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடி ஏந்தி கொண்டாடினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!