ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள கர்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஒரு ஸ்கூட்டி விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து, அந்த விபத்தைப் பார்க்க அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் மீது அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஜார்கண்ட் சாலை விபத்து- லாரி மோதி 7 பேர் பலி
