அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பேட்டையில் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள வரதராஜன் பேட்டை பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் என பலதரப்பட்ட தரப்பினர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து

கள்ளத்தனமாக மது விற்பனை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது திடீரென ஊருக்குள் செல்ல முயன்ற பேருந்தை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் வருவாய்த் துறையினர் மற்றும் டாஸ்மார்க் அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் இன்றைய தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் டாஸ்மாக் கடை அப்பகுதியில் இருந்து அகற்றப்படும் என தெரிவித்ததுடன் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தெரிவித்ததன் பேரில் பேராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரப்பரப்பாக காணப்பட்டது.
