Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் ரோட்டரி சங்கம் இஃப்தார் நோன்பு திறப்பு

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை மர்லின் மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்டம் 3000த்தின் முன்னாள் ஆளுநர் டாக்டர்.ஏ.ஜமீர் பாஷா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் ஆதீன சந்நிதானம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் பங்குத் தந்தை மற்றும் மறைவட்ட அதிபர் பேரருள்ஏ.சவரிநாயகம் அடிகள், மாவட்ட அரசு காஜி அல்ஹாஜ் எஸ். சதக்கத்துல்லாஹ் உலவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து நல்லிணக்க உரை நிகழ்த்தினர்.ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.அந்தோணிசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர். கருணாகரன், துணை ஆளுநர் எம். பார்த்திபன் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு நோன்பு நோற்றுள்ள நோன்பாளிகளை வாழ்த்தி பேசினர்.

error: Content is protected !!