Skip to content
Home » வெற்றி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி….. சைதை துரைசாமி அறிவிப்பு

வெற்றி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி….. சைதை துரைசாமி அறிவிப்பு

  • by Senthil

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன்  வெற்றி. இவர் சினிமா டைரக்டர். புதிதாக ஒரு படம்  தயாரிக்க திட்டமிட்ட அவர் நண்பர்கள் சிலருடன் லொக்கேசன் பார்க்க  இமாச்சல பிரதேசம் சென்றார். அங்கு  சட்லஜ் ஆற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் வெற்றி காணாமல் போனார்.  3 நாள் ஆகியும் அவர் என்ன ஆனார் என்று தெரி்யவில்லை. இந்த நிலையில், சைதை துரைசாமியை பற்றி துப்புகொடுத்தால் ரூ.1 கோடி சன்மானம் தருவதாக சைதை துரைசாமி  அறிவித்துள்ளார்.

சட்லஜ் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களிடமும், வெற்றி துரைசாமி குறித்து
தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி  இமாச்சல் காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இமாச்சலில் வானிலை மிக மோசமாக இருப்பதால், பல இடங்களில் தேடுதல் பணி
நிறுத்தப்பட்டிருப்பதாகவும், வெற்றி துரைசாமி குறித்து தகவல் அறிய இரண்டு நாள்கள் ஆகும் என்று
இமாச்சல் காவல்துறை தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இமாச்சலபிரதேசத்தில் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னை மாநகர முன்னாள்
மேயர் சைதை துரைசாமியின் மகன் காணாமல் போனார். அவரை தேசிய பேரிடர் மீட்பு படையினர்
மூன்றாவது நாளாக இன்றும் தேடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் வானிலை மிக மோசமாக
இருப்பதால் தேடும்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்னை நந்தனம் சிஐடி நகர் முதலாவது பிரதான சாலையில் குடும்பத்துடன் வசிக்கும் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). திரைப்பட இயக்குநராக  பணியாற்றி வந்தார்.

வெற்றி, தான் புதிதாக இயக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக
சில நாள்களுக்கு முன்பு விமானம் மூலம் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றார். அவருடன் அவரது நண்பர்
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள சொரியங்கிணத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த
செல்வராஜ் மகன் கோபிநாத் (32) என்பவரும் சென்றார்.
அங்கு அவர்கள், ஞாயிற்றுக்கிழமை கஷாங் நாலா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சட்லஜ் நதி ஓடும்
மலைப்பகுதியில் ஒரு வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த காரை ஓட்டி வந்த அப்
பகுதியைச் சேர்ந்த தன்ஜின் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மலைப் பாதையில் சுமார்
200 அடி உயரத்திலிருந்து கீழே உருண்டது. அந்த கார் 200 அடி பள்ளத்தின் கீழே ஓடிக் கொண்டிருந்த சட்லஜ்
நதிக்குள் விழுந்து, மிதந்தது. உள்ளூர் போலீஸார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கார் பள்ளத்தில் உருளும்போது காருடன் விழுந்த கோபிநாத், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவர், அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேர தேடுதலுக்குப் பிறகு கார் ஓட்டுநர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்டார்.

உள்ளூர் போலீஸார், மீட்பு படையினரின் நீண்ட தேடுதலுக்கு பின்னரும் வெற்றி கிடைக்கவில்லை. விபத்து
ஏற்பட்ட பகுதியில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. இதையடுத்து வெற்றியை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர், அங்கு
வரவழைக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் போலீஸாருடன் வெற்றியை தேடும்
பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விபத்து குறித்து தகவலறிந்த சைதை துரைசாமியின் உறவினர்கள் இமாச்சல பிரதேசத்துக்கு விரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!