சென்னை கோட்டூர்புரத்தில் நகைக்கடை பெண் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனின் தம்பி சுரேஷ் மீது புகார் எழுந்துள்ளது. அடகு வைத்த 128 கிராம் தங்க நகைகளை மீட்டு விற்றால் ரூ.50 ஆயிரம் கூடுதலாக தருவதாகக் கூறி பணம் பெற்றுள்ளார். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து பணத்துடன் தப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து யாஸ்மின் அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் உள்ளிட்ட 3 பேரைத் தேடி வருகின்றனர்.
நகைக்கடை பெண் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி
