மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் 2017-ம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கு சமமானவை என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தை மியான்மர் மீறியதை உறுதி செய்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு அந்நாட்டு அரசுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 7.30 லட்சம் ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு இனப்படுகொலை செய்ததாகத் தீர்ப்பு
